தொடர்ந்து அக அமைதி தியான வகுப்பில் கலந்து கொண்டு தியான முறைகளை தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக்கி தங்கள் வாழ்வை மேம்படுத்த விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டதே அக அமைதி தியானம் உறுப்பினர் திட்டம்.


கவனச் சிதறல்களில் இருந்து மீட்டெடுத்து நமது கவனக் குவிப்பை, திறனை அதிகரிக்கிறது
மன அழுத்தத்தை குறைத்து அமைதி நிறைந்த பதட்டமற்ற நிலையில் வாழ உதவுகிறது.
காரணமற்ற பயம், பதட்டம், கவலை, கடினமான உணர்ச்சி நிலைகளிலிருந்து காத்து சம நிலையுடன் வாழ உதவுகிறது
அன்றாட வாழ்வில் நிகழ்காலத்தில் எப்போதும் விழிப்புணர்வுடன் வாழ வழிவகை செய்கிறது.
தொடர் பயிற்சி தூக்க முறைகளை ஒழுங்குபடுத்தி தூக்கமின்மையை குறைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் வாழ்வதால் எப்போதும் புத்துணர்வுடன் இயங்க உதவுகிறது.
உலகத்தின் நிலையற்ற தன்மையை அனுபவப்பூர்வ அறிவாக பெற உதவுகிறது. இவ்வறிவு வாழ்வியலை மேம்படுத்துகிறது.
ஆன்மிக விழிப்புணர்வை வளர்த்தெடுத்து அந்த நிலையில் வாழ்வை வாழ்ந்திட தொடர் பயிற்சிகள் உதவுகிறது.
உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவில் துவங்கி உங்களின் குடும்ப மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்துகிறது.
மனதின் செயல்பாடுகள் உலக இயக்கவியல் அவற்றிற்கான தொடர்புகள் அனுபவப்பூர்வமாக அறிய உதவுகிறது.
அனைத்து உயிரினங்களுக்கும் இடையேயான தொடர்பை அனுபவப்பூர்வமாக பெற இயல்பான கருணையும் அன்பும் வளர்கிறது.
சமூக நல்மாற்றத்திற்கான விதை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அது விழித்துக் கொள்ள சமூக நல்மாற்றத்திற்கு வித்திடுகிறது.
உங்களுக்குத் ஏற்ற திட்டத்தில் இணையவும்
* பெண்களுக்கு மட்டும் | வகுப்பு பதிவு - தியானப் பயிற்சி வகுப்பின் பதிவுகள் | திதிசெ = தினமும் தியானம் செய்வோம் பயிற்சி வகுப்பு (Recorded Course) | அனைவரும் கூட்டுத் தியானப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
Membership consists of Recorded courses, Live classes, Group Meditation Classes, Q and A Sessions, Mobile Apps, Community Access, Challenges to improve consistency, Forum Access, Certificates and More...

"அக அமைதி தியானம்" உறுப்பினர் திட்டம் தியானப் பயிற்சிகளைக் கற்று, தங்கள் வாழ்வில் தொடர்ந்து பயின்று வாழ்வையையும் உள்நோக்கியத் தேடல் பயணத்தையும் மேம்படுத்த விரும்பும் மக்களுக்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
இதில் ஒரு மாதம் துவங்கி, 3 மாதம், 6 மாதம் அல்லது 12 மாதம் வரை உறுப்பினராக நீங்கள் இணையலாம். உறுப்பினராவதன் மூலம் நீங்கள், உங்கள் உறுப்பினர் காலம் முழுவதும் நடைபெறும் இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். அதோடு உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட பயிற்சி வகுப்புகளும் வழங்கப் படும். அது மட்டுமின்றி இணைய வழி பயிற்சி வகுப்புகளின் பதிவுகளும் வழங்கப்படும்.
நீங்கள் விரும்பும் நேரத்திலும் விரும்பும் இடத்திலும் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக Android, iOS செயலிகளும் கிடைக்கும்.
5 முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அக "அமைதி தியானம் உறுப்பினர் திட்டம்" தங்கள் அக அமைதியை, வாழ்வியலை தியானப் பயிற்சிகள் மூலம் மேம்படுத்த விரும்புவோருக்காக துவங்கப்படுகிறது
1. தினமும் தியானப் பயிற்சி செய்ய ஊக்கமளித்தல்
2. எழும் கேள்விகளுக்கான விளக்கங்கள் வழங்குதல்
3. தியான முறைகள், வாழ்வியல் குறித்த அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு
4. உள் நோக்கிய தேடல் பயணத்தில் முன்னேற உதவுதல்
5. வாழ்வியல் மேம்பாட்டிற்கு வழிகாட்டல்


அகிலத்தின் அமைதி நமது ஒவ்வொருவரின் அகத்தின் அமைதியில் விதையாக வாழ்கிறது. அதனை உணர்ந்தபடியால் "அக அமைதி தியானம் - உறுப்பினர் திட்டம்" என்ற இம்முன்னெடுப்பில் இணைபவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் தியான முறைகளைப் பயன்படுத்தி அக அமைதியை மேம்படுத்தலாம். அதன் வாயிலாக தங்கள் வாழ்வை மேம்படுத்தி சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்யலாம்.
Zoom Classes
Courses
QA Sessions Challenges Community
Zoom classes
ஒவ்வொரு வாரமும் இணைய வழி வகுப்பு
COURSES
5, 7, 10 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய வகுப்புகள்
qa sESSIONS
வாரந்தோறும் - சிறப்பு கேள்வி பதில் நேரம்
24 * 7 - Priority QA Form
CHALLENGES
1 நாள், 1 வாரம், மாதம், வருடாந்திர சவால்கள்
ஞாயிறு - நீண்ட நேர பயிற்சி சவால்
சவால் வெற்றியாளருக்கான ஊக்கப் பரிசுகள்
COMMUNITY
certificate
special events
பயிற்சியாளர் ரா. மகேந்திரன்
எளிதில் இணையலாம்
எப்பொழுதும் கற்கலாம்
எங்கிருந்தும் கற்கலாம்
தனிச் செயலி (Mobile app)
அக அமைதி தியானம் உறுப்பினராக இணைந்து பயன் பெறுங்கள்
நேர்மறை மாற்றத்தை தேடுவோர் அனைவருக்கும் உதவும் பயிற்சி. வாழ்வை மாற்றிடும் அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய தியானப் பயிற்சி.
தமிழ் செல்வி மீனாட்சி சுந்தர்
3 நாள் தியானப் பயிற்சி
பின்பற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிய வகையில் தியான முறைகளை கற்பித்தார் பயிற்சியாளர். மீளாய்வு, மதிப்புரைகள் மூலம் கற்ற தியான முறைகளை நன்கு அறிந்து கொண்டேன்.
பால கிருஷ்ணன்
10 நாள் தியானப் பயிற்சி
பயிற்சிக்குப் பின் முழு அமைதியுடனும் புத்துணர்வுடனும் காணப்படுகிறேன். பயிற்சியாளர் மகேந்திரனுக்கு எனது வணக்கங்கள்.
முத்துச்சாமி டி
3 நாள் தியானப் பயிற்சி
இந்தப் பயிற்சி ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சி. உள் நோக்கிய பயணம் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்பதனை அறிந்து கொண்டேன்.
முத்துராமலிங்கம்
3 நாள் தியானப் பயிற்சி
ஆனா பானா சதி, விபாசனா தியானமுறை எனது உணர்வு நிலைகளில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. பெரும் தத்துவங்களை எளிமையாக புரிய வைத்தார் பயிற்சியாளர்
குணசீலன் (எ) இறவான்
10 நாள் தியானப் பயிற்சி
10 நாள் தியானப் பயிற்சி இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவும் நேரடியாக எனது தினசரி வாழ்வில் நல்மாற்றங்களை தந்தது.
ப.இராசேந்திரன்
10 நாள் தியானப் பயிற்சி
முக்கியம் : உங்கள் அக அமைதியையும் வாழ்வியலையும் மேம்படுத்த
யார் உறுப்பினர் திட்டத்தில் இணையலாம்?
அக தியான முறைகளை கற்று பயிற்சி செய்ய விரும்புவோர். தமது அக அமைதியையும் வாழ்வியலையும் மேம்படுத்த விரும்புவோர் உறுப்பினராக இணையலாம்.
தியானம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் கலந்து கொள்ளலாமா?
தியான முறை பற்றி முன் அனுபவம் இல்லாதவர்களும், ஏற்கனவே பயிற்சி செய்வர்களும் அக அமைதி தியானம் உறுப்பினர் திட்டத்தில் இணையலாம்.
உறுப்பினர் திட்டத்தின் கால அளவு எவ்வளவு?
1 மாதம், 3 மாதம், 6 மாதம், 12 மாதம் என நான்கு திட்டங்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால் எந்த உறுப்பினர் திட்டத்திலும் மீண்டும் மீண்டும் இணைந்து பயணிக்கலாம்.
இதற்கென தனிச் செயலி உள்ளதா?
ஆம். Android, iOS செயலிகள் உள்ளன. அவற்றை பதிவிறக்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சியின் போது எங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேட்க இயலுமா?
ஆம். பயிற்சியின் போது தோன்றும் கேள்விகளைக் கேட்க தனிப் பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
நான் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு உறுப்பினர் திட்டத்திற்கும் மிகக் குறைந்த தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்தத் தொகையை செலுத்தினால் மட்டுமே போதுமானது. மேலும் பங்களிப்பு செய்ய விரும்பினால் நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
40+ காணொளிகள்
நமது அக அமைதியை மேம்படுத்தவும், வாழ்வியலை மேலும் செம்மைப் படுத்தவும் அக அமைதி தியானத்தின் புதிய மற்றும் முக்கிய முன்னெடுப்பான "உறுப்பினர் திட்டம்" என்ற இந்த முயற்சியில் இணைந்து பயன் பெறுங்கள்.
அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.

அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது? அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
ரா. மகேந்திரன்