3 நாள் தியானப் பயிற்சி வகுப்பில் நாம் ஆனா பானா சதி தியானம் மற்றும் விபாசனா தியானம் என்ற இரண்டு தியான முறைகளை கற்று பயிற்சி செய்வோம்.
ஆனா பானா சதி தியானம்
விபாசனா தியானம்
மீளாய்வு பயிற்சி
வாழ்வியல் பயிற்சி
3 நாள் தியானப் பயிற்சி வகுப்பில் நாம் ஆனா பானா சதி தியானம் மற்றும் விபாசனா தியானம் என்ற இரண்டு தியான முறைகளை கற்று பயிற்சி செய்வோம்.
முதல் நாள் - ஆனா பானா சதி தியானம்
2வது நாள் - விபாசனா தியானம்
3வது நாள் - வாழ்வியலில் தியான முறைகள்
மீளாய்வு பயிற்சிகாலை 11 மணி முதல் 12. 30 வரை + 30 நிமிடம்
5 முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 3 நாள் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது
1. இரு தியான முறைகளைக் கற்றறிய பயிற்சி தருதல்
2. எழும் கேள்விகளுக்கான விளக்கங்கள் வழங்குதல்
3. அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு
4. உள் நோக்கிய தேடல் பயணத்தில் முன்னேற உதவுதல்
5. வாழ்வியல் மேம்பாட்டிற்கு வழிகாட்டல்
அகிலத்தின் அமைதி நமது ஒவ்வொருவரின் அகத்தின் அமைதியில் விதையாக வாழ்கிறது. அதனை உணர்ந்தபடியால் தியான முறைகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி மகள் தங்கள் வாழ்வையும், தங்கள் சுற்றத்தார் வாழ்வையும் மேம்படுத்த உதவுவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும். இப்பயிற்சியின் மூலமாக பெண்கள் தங்கள் அக அமைதியை வளர்த்தெடுக்கவும் அதன் மூலமாக சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவும் முடியும் என்று நம்புகிறோம்.
மூன்று நாட்கள்
6 மணி நேர பயிற்சி
செய்முறை விளக்கம்
முதல் நாள்
அறிமுகம், பயிற்சி செய்முறை, மீளாய்வு, அனுபவப் பகிர்வு, கேள்வி பதில், தத்துவ விளக்கம்
2 ஆம் நாள்
அறிமுகம், பயிற்சி செய்முறை, மீளாய்வு, அனுபவப் பகிர்வு, கேள்வி பதில், தத்துவ விளக்கம்
3 ஆம் நாள்
அறிமுகம், பயிற்சி செய்முறை, மீளாய்வு, அனுபவப் பகிர்வு, கேள்வி பதில், தத்துவ விளக்கம்
காலை 11 மணிக்கு துவக்கம்
12.30 மணி வரை
30 நிமிடம் முக்கிய கேள்விகளுக்கு
பயிற்சி வகுப்பு பதிவுகள்
உங்கள் முக்கியக் கேள்விகள்
பயிற்சியாள்ர் ரா. மகேந்திரன்
எளிதில் கற்கலாம்
வாழ்நாள் முழுமைக்கும் பலன்
எப்பொழுதும் கற்கலாம்
எங்கிருந்தும் பயிற்சி செய்யலாம்
தனிச் செயலி (Mobile app)
இந்த அக அமைதி தியானப் பயிற்சி வகுப்பு பெண்களுக்கு மட்டும்
நேர்மறை மாற்றத்தை தேடுவோர் அனைவருக்கும் உதவும் பயிற்சி. வாழ்வை மாற்றிடும் அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய தியானப் பயிற்சி.
தமிழ் செல்வி மீனாட்சி சுந்தர்
3 நாள் தியானப் பயிற்சி
பின்பற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிய வகையில் தியான முறைகளை கற்பித்தார் பயிற்சியாளர். மீளாய்வு, மதிப்புரைகள் மூலம் கற்ற தியான முறைகளை நன்கு அறிந்து கொண்டேன்.
பால கிருஷ்ணன்
10 நாள் தியானப் பயிற்சி
பயிற்சிக்குப் பின் முழு அமைதியுடனும் புத்துணர்வுடனும் காணப்படுகிறேன். பயிற்சியாளர் மகேந்திரனுக்கு எனது வணக்கங்கள்.
முத்துச்சாமி டி
3 நாள் தியானப் பயிற்சி
இந்தப் பயிற்சி ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சி. உள் நோக்கிய பயணம் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்பதனை அறிந்து கொண்டேன்.
முத்துராமலிங்கம்
3 நாள் தியானப் பயிற்சி
ஆனா பானா சதி, விபாசனா தியானமுறை எனது உணர்வு நிலைகளில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. பெரும் தத்துவங்களை எளிமையாக புரிய வைத்தார் பயிற்சியாளர்
குணசீலன் (எ) இறவான்
10 நாள் தியானப் பயிற்சி
10 நாள் தியானப் பயிற்சி இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவும் நேரடியாக எனது தினசரி வாழ்வில் நல்மாற்றங்களை தந்தது.
ப. இராசேந்திரன்
10 நாள் தியானப் பயிற்சி
முக்கியம் : இந்தப் பயிற்சி வகுப்புகள் பெண்களுக்கு மட்டும்.
யார் பதிவு செய்யலாம்?
இணையத்தை, ஜூம் செயலியைப் பயன்படுத்த தெரிந்த அனைத்துப் பெண்களும் கலந்து கொள்ளலாம்.
தியானம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது நான் கலந்து கொள்ளலாமா?
புதியவர்களும் கற்றுப் பயன் பெறலாம். ஏற்கனவே தியானப் பயிற்சிகள் அறிந்தவர்களும் கற்றுப் பயன் பெறலாம்
எவ்வளவு நாளைக்கு நான் இப்பயிற்சி பதிவுகளைப் பயன்படுத்த இயலும்?
நீங்கள் விரும்பும் காலம் வரை பயன்படுத்தலாம்.
இதற்கென தனிச் செயலி உள்ளதா?
ஆம். Android, iOS செயலிகள் உள்ளன. அவற்றை பதிவிறக்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சியின் போது எங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேட்க இயலுமா?
ஆம். பயிற்சியின் போது தோன்றும் கேள்விகளைக் கேட்க தனிப் பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
நான் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
இந்தப் பக்கத்தில் பயிற்சிக்கான மிகக் குறைந்த கட்டணத் தொகை உள்ளது. அத்தொகையை செலுத்தினால் போதுமானது
ஜூம் வழிப் பயிற்சி
நமது அக அமைதியை மேம்படுத்தவும், வாழ்வியலை மேலும் செம்மைப் படுத்தவும் அக அமைதி தியானத்தின் புதிய மற்றும் முக்கிய முன்னெடுப்பான "3 நாள் தியானப் பயிற்சி" என்ற இந்த முயற்சியில் இணையுங்கள்.
அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.
அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது? அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
ரா. மகேந்திரன்