அக அமைதி தியானம்

ஒரு நாள் இணைய வழி  தியானப் பயிற்சி வகுப்பு

🧘🏽‍♂️ ஆனா பான சதி தியானம்  

🧘🏽‍♂️ விபாசனா தியானம் (அறிமுகம்)

GET 50% OFF - Coupon Code  IPM50

நவம்பர்
பயிற்சி

01  நவம்பர் 2024

₹300

இரவு 8 மணி முதல் (IST)

நவம்பர் பயிற்சி

08 நவம்பர் 2024

₹300

இரவு 8 மணி
முதல் (IST)

நவம்பர்
பயிற்சி

15 நவம்பர் 2024 

₹300

இரவு 8 மணி
முதல் (IST)

-> 7.45 மணி முதல்  வகுப்பில் உள் நுழையலாம்

8 மணி

 செய்முறை விளக்கம்

8.11 மணி

தியானப் பயிற்சி செய்யும் நேரம்

9.01

மீளாய்வு  செய்யும் நேரம்

9.11 மணி

கேள்வி - பதில் நேரம்

ஒரு நாள் தியானப் பயிற்சித் திட்டம்

🧘🏽‍♂️பயிற்சி 

🧘🏽‍♂️தியானம் - ஆனா பானா

🧘🏽‍♂️முதல் 10 நிமிடங்கள் பயிற்சி செய்யும் முறை விளக்கம்.


🧘🏽‍♂️30 நிமிடம் செயல் வழி பயிற்சி. 

🧘🏽‍♂️05 நிமிடம் மீளாய்வு

🧘🏽‍♂️25 நிமிடம் கேள்வி நேரம்

🧘🏽‍♂️அறிமுகம்

🧘🏽‍♂️தியானம் - விபாசனா

🧘🏽‍♂️தியான பயிற்சி முறை அறிமுகம்


🧘🏽‍♂️தொடர் பயிற்சிக்கான வழி காட்டல். 

🧘🏽‍♂️பயனுள்ள தகவல்கள்

🧘🏽‍♂️4 நிலை விளக்கம்

பயிற்சி பெற்றவர்களின் அனுபவம்

ப. இராசேந்திரன், சென்னை
வணக்கம்.
திரு ரா.மகேந்திரன் நடத்திய 10 நாட்கள் தியானப் பயிற்சியில் சமீபத்தில் பங்கு கொண்டு, நல்ல முறையில் அப்பயிற்சியை முடித்தேன்.

பயிற்சி மிக எளிமையாகவும், இன்றைய நடைமுறைக்கு ஏற்றவாரும் இருந்தது. 

எனது தனிப்பட்ட அனுபவத்தில் பின் வரும் பலன்களை நான் உணர்ந்தேன்.

1. அதிகாலையில் எழுந்து தியானத்துடன் நாளைத் தொடங்கியதால்,மனதைக் குழப்பமற்ற நிலையில் வைத்து நாள் முழுவதும் அமைதி காண முடிந்தது.
2. அன்றாட வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவியது
3. எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் நிறைந்தது.
4. இரவு நன்றாக உறங்க முடிந்தது.
5. உள் அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தந்தது.

இன்றைய அவசர உலகில் இந்த பயிற்சி நிச்சயம் அனைவருக்கும் தேவை. நம் மனதைச் செம்மைப்படுத்த நிச்சயம் இந்த பயிற்சி உதவும்.
நம் மனமது செம்மையானால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. அனைவரும் இப் பயிற்சியில் சேர்ந்து பலன் பெறுங்கள்
நன்றி.

ப. இராசேந்திரன்
சென்னை, 2024

சி. முரளி, மதுரை

அனைவருக்கும், வணக்கம் !
என் பெயர் முரளி மதுரையில் வசிக்கிறேன்.

தியானம் என்பது மகான்கள் மற்றும் முனிவர்களால் மட்டும்தான் செய்ய முடியும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நம்மால் அது இயலாத காரியம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் நினைத்தது தவறு என்று உணர்கிறேன். ஏனென்றால், என்னாலும் இப்பொழுது தியானம் செய்ய இயலும். என் மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு செயலை செய்ய என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை இப்பொழுது வந்துள்ளது. 

இதை எனக்கு சாத்தியப்படுத்தியது திரு. மகேந்திரன் அவர்கள் . ஆம் ! அவர் “அக அமைதி தியானம்” என்ற ஒரு பயிற்சியினை துவங்கினார். அதில் ஆனா பானா சதி மற்றும் விபாசனா முறையை கற்றுக் கொடுத்தார். அது மிகவும் எளிமையான முறையாக இருந்தது .

என்னால் இப்பொழுது என் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய முடிகிறது.  எனது சுவாசக் காற்றினை என்னால் இப்பொழுது உணர முடிகிறது .என் உடம்பில் உருவாகும் அனைத்து அசைவுகளையும் உணர்ந்து என்னால் இப்பொழுது என்னையே கட்டுப்படுத்த முடியும். இப்பொழுது நான் எந்த செயலினை செய்தாலும் அதில் ஒரு தெளிவான முடிவினை என்னால் எடுக்க முடிகிறது.

எனது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்த திரு மகேந்திரன் அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்பொழுது எனது வாழ்க்கை ஒரு புதிய பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
சி. முரளி, மதுரை  - 2024

முக்கிய பலன்களில் சில


🧘🏽‍♂️

அக அமைதி


🧘🏽‍♂️

செயல் திறன் மேம்பாடு


🧘🏽‍♂️

சிந்தனை தெளிவு


🧘🏽‍♂️

உறவுகள் மேம்பாடு

🧘🏽‍♂️

நிகழ்காலத்தில் வாழ்தல்

🧘🏽‍♂️

உடல் நல மேம்பாடு


🧘🏽‍♂️

மன நல மேம்பாடு

🧘🏽‍♂️

நல்ல தூக்கம்

🧘🏽‍♂️

மன நிறைவு

🧘🏽‍♂️

மீண்டெழும் வல்லமை

அக அமைதி தியானம்
01 நாள் இணைய வழி

தியானப் பயிற்சி

தங்கள் அகத்திலும், இல்லத்திலும், இந்த அகிலத்திலும் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும் பரவ விரும்பும் அனைவருக்குமான இணையவழி தியான பயிற்சி வகுப்பு. முழுவதும் செயல்வழிப் பயிற்சி.

பயிற்சி வகுப்பில் சந்திப்போம்

உங்களின் முக்கியக் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி வகுப்பில் என்ன தியான முறைகளை கற்றுத் தருகிறீர்கள்?

தியான முறைகள் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொள்ளலாமா?

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதும் உள்ளதா?

பயிற்சி வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இயலுமா?

தியான பயிற்சி வகுப்பில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாமா?

10 நாட்களும் தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமா?

தியான பயிற்சி வகுப்பில் இருந்து இடையில் விலகினால் எனக்கு ஏதும் தீங்குகள் ஏற்படுமா?

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவது எப்படி?

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள எனக்கு தேவையானவைகள் எவை எவை?

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவது எப்படி?

இப்பொழுதே பதிவு செய்க

இந்த மாத பயிற்சி

300

ஒரு நாள் மட்டும்

வெள்ளிக் கிழமை

இரவு 8 முதல் 9.30 மணி வரை

50 % OFF CODE IPM50

பயிற்சியாளர் பற்றி

ரா. மகேந்திரன் (எ)
கருவெளி ராச. மகேந்திரன்

அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம். ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது? அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்

அன்புடன்

ரா. மகேந்திரன்

நான் ஒரு நாள் தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

Mahe Tech Academy
A Initiative By RDRC

ADDRESS:
Theni, Tamil Nadu
India - 625531

GET IN TOUCH:

(c) 2023 -24 Resource Development And Research Center, Theni

© Copyright 2021 Company Name