அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.
அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது? அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
ரா. மகேந்திரன் BE., MBA., DSE.,
தியானம் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ள, இணையத்தை, ஜூம் செயலியைப் பயன்படுத்த தெரிந்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
புதியவர்களும் கற்றுப் பயன் பெறலாம். ஏற்கனவே தியானப் பயிற்சிகள் அறிந்தவர்களும் கற்றுப் பயன் பெறலாம்.
ஆம். பயிற்சியின் போது தோன்றும் கேள்விகளைக் கேட்க தனிப் பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
ஆம். Android, iOS செயலிகள் உள்ளன. அவற்றை பதிவிறக்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் காலம் வரை பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில் பயிற்சிக்கான மிகக் குறைந்த கட்டணத் தொகை உள்ளது. அத்தொகையை செலுத்தினால் போதுமானது. மேலும் பங்களிப்பு செய்ய விரும்பினால் எங்களது வாட்ச் அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் +91-8645614210
எங்களது வாட்ச் அப் எண் +91- 8645614210 இல் தொடர்பு கொள்ளவும். நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.